வி.சுகிர்தகுமார்      

 அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்திற்கு சுமார் 45 வருடங்களின் பின்னர் குடிநீர் இணைப்பை பெற்றுக்கொண்டமையிட்டு அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.


அரசாங்கத்தின் குடிநீர் இணைப்பை வழங்கும் திட்டத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினூடாக உள்ளக வீதிகளுக்க குடிநீர் குழாய்கள் பொருத்தும் வேலையினை ஆரம்பித்து வைக்கும் பணி இன்று (22) இடம்பெற்றது.


45 பின்னர் குடியேற்றப்பட்ட கிராமமாகும். இங்கு 650 குடும்பங்கள் வாழ்கின்றனர். ஆயினும் இங்கு குடிநீர் பெறும் வசதிகள் குடியேற்றப்பட்ட காலம் முதல் இல்லை. கிணறுகள் அமைத்தாலும் கூட குடிநீரைப்பெற முடியாத பாறைகள் நிறைந்த நிலக்கீழ்த்;தன்மையினை இக்கிராமம் கொண்டது.


இந்நிலையில் இங்குவாழ்ந்த மக்கள் அயல் கிராமங்களில் இருந்தும் அருகில் உள்ள ஆற்று நீரோடையில் இருந்தும் நீரைப்பெற்று வாழ்ந்து வந்தனர். பல வருடங்கள் பல அரசாங்கங்களிடம் இக்கோரிக்கையினை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர்.


இந்நிலையில் கடந்த காலத்தில் பிரதான வீதிகளுக்கான குடிநீர் குழாய் பொருத்தும் வேலைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


ஆயினும் தற்போதைய பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மூலமாக அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் இதன் அடிப்படையில் 14 கிலோமீற்றர் உள்ளக வீதிகளில் 2.5 கிலோமீற்றருக்கான உள்ளக வீதிகளுக்கு குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு வரும் நிலையில் தமக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கவுள்ளதாகவும் அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.