தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இவர் 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்தார்.