காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி நடராஜானந்தரின் 58வது சிரார்த்த தின வைபவம்!

(காரைதீவு வேதசகா)

சேவையின் சின்னமாம் இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 58வது   சிரார்த்த தின வைபவம்  அவர் பிறந்த காரைதீவு மண்ணில் (18.03.2025)   செவ்வாய்க்கிழமை காலை எளிமையாக நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலக முன்றலில் அமையப்பெற்ற அடிகளாரது திருவுருவச்சிலையடியில் சுவாமி நடராஜானந்த நூற்றாண்டுவிழாச் சபையின் செயலாளரும் இந்துசமயவிருத்திச்சங்கத்தின் முன்னாள் தலைவருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக, காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி.அருணன் நந்திக் கொடியை ஏற்ற, சங்கீத ஆசிரியை திருமதி புவனம் ஜெயகணேஷ் துறவற கீதம் இசைத்தார்.

முதலில் பகவான் ஸ்ரீ இராமகிருஸ்பரமஹம்சரின் வேதபாராயணத்தைத்தொடர்ந்து சுவாமியின் திருவுருவுச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தலும் புஸ்பாஞ்சலியும்இடம்பெற்று  தொடர்ந்து சங்கச்செயலாளர் கு.ஜெயராஜியினால் மங்களாரதி காட்டப்பட்து.

பிரதம அதிதியாக  காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன் சிறப்பு அதிதியாக காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.பிரபல தொழிலதிபர் எஸ்.சந்திரகுமார் மற்றும் 

ஆலய தலைவர்கள் சுவாமியின் அபிமானிகள் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் உறவுக்காரர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.