வி.சுகிர்தகுமார்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.அநிருத்தனன்; வழிகாட்டலுக்கமைவாக அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (18) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர கு. ஜெயராஜி, கலந்து கொண்டு திணைக்களம் சார்பாக விளக்கம் அழிக்கப்பட்டதுடன் பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந் இந்து நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து நிறுவனங்கள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றின் எதிர்கால செயற்பாடுகள் கடந்த கால வேலைத்திட்டங்கள், வருடாந்த கூட்டங்களில், வருடாந்த கணக்கறிக்கைகள் சமர்ப்பித்தல். ஒவ்வொரு ஆலயங்கள் இந்து மன்றங்களின் கீழும் அறநெறி பாடசாலைகளை உருவாக்குதல் அறநெறி பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல். பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படும் இந்து சமய நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகள் புதிய வருடத்திற்கான திட்டங்கள் இயங்காத மன்றங்களை இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். போன்ற விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.