கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு.
-பிரபா –
கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (08) அதன் தலைவர் எஸ். அமரசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஒன்று கூடலில் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற மணிமண்டபத்துடன் கூடிய சிவலிங்க பிரதிஷ்டைக்கான பணியை தொடர்வது தொடர்பாகவும், அதற்கான நிதி சேகரிப்பது விடயமாகவும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, கல்முனை போன்ற நகரப் பகுதிகளிலும், மற்றும்
தனவந்தர்கள், உதவி செய்யக்கூடிய தன்னார்வமிக்க அமைப்புகள், வெளிநாடுகளில் உதவி செய்யக்கூடிய அமைப்புகளும், தனி நபர்கள், போன்றோர்களையும் தொடர்பு கொண்டு இதற்கான பணியை தொடர்வதற்கான நிதியை பெற முயற்சி
செய்வதென்ற முடிவு எடுக்கப்பட்டது.
இம் மணி மண்டபத்துடன் கூடிய சிவலிங்க பிரதிஷ்டைக்கான மொத்த செலவாக ரூபாய் 20 லட்சம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
தொடர்ந்து சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்துக்கான ஆன்மீக இணைப்பாளராக திரு. மாசிலாமணி அமிர்தலிங்கம் அவர்களையும்,ஊடக இணைப்பாளராக திரு. நடராசா சௌவியதாசன், அவர்களையும் நியமித்தனர்.
குருக்கள் மடத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற மணிமண்டபத்துடன் சிவலிங்க பிரதிஷ்டை பணிக்காக உதவி செய்ய விரும்புவர்கள் சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கேட்க்கபடுகின்றனர்.
தலைவர் – 0778419276
செயலாளர் – 0777169737
பொருளாளர் – 0772599013





