கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்!
தொடர்ச்சியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
06.03.2025 வியாழக்கிழமை கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில் தரம் 5 இல் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற இரு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக சிறு தொகை நிதி வழங்கப்பட்டன
இந் நிகழ்வு அதிபர் திரு .புவனேஸ்வரன் தலமையில் நடைபெற்றது இங் நிகழ்விற்கு அதிதியாக சமய பாட ஆசிரிய ஆலோசகர் திரு M. லக்குணம் அவர்களும் ஆசிரியர் திரு கொலின்ஷ்,ஆசிரியர் திரு சுபராஜன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



