அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக சமய செயற்பாட்டாளரான முத்துலிங்கம் டினோசன் கடந்த 27.02.2025 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி A.M.M.றியால் அவர்களின் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

பெரியநீலாவணை கமு/ விஸ்ணு மகா வித்தியாலயம் மருதமுனை,கமு/அல்மனார் மத்திய கல்லூரியின் பழய மாணவரான இவர் ஒரு இளங்கலை சிவில் பொறியியல் பட்டதாரியும், சமய கலை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் உளவியல் டிப்ளோமாதாரியும் ஆவார்.இவர்
பெரியநீலாவணை சிவில் பாதுகாப்பு குழு உப தலைவராகவும், SAWAD சமூக அமைப்பின் கிராமிய தலைவராகவும், பெரியநீலாவணை வெஸ்டர்ன் விளையாட்டுக்கழகத்தின் சிரேஸ்ர உறுப்பினரும், மற்றும் பெரியநீலாவணை ஹீ மாகாவிஸ்ணு பேச்சியம்மன் ஆலய முன்னைநாள் அறங்காவலர் சபை உறுப்பினருமாவார். இவர் பல சமூக சமய செயற்பாட்டுகளில் ஈடுபாடு உடையவர்.இவர் பெரியநீலாவணை முத்துலிங்கம் – கமலேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரர் என்பது குறிப்படத்தக்கதாகும்.