அரசின் அதிரடிஉத்தரவு – படையில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் படையினரை கைது செய்ய ஆணை!

தற்போது நாட்டில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தற்போதைய அரசு பல நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.

பல சம்பவங்களுடன் அரச படையில் இருந்து தப்பி ஓ டிய படை வீரர்களுக்கு தொடர்பிருப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அரசாங்கத்தால் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி இன்றுகாலை ஆராய்ந்தது.அதன் பின்னர் பாதுகாப்புச் செயலர் இந்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளார்.

முப்படையில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் படையினரை உடன் கைது செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.