மட்டக்களப்பு ஆதினத்தில் பெரும் சிவன் இரவு விரத பெருவிழா 2025 – 02 -26
-பிரபா-
மட்டக்களப்பு மயிலம்பாவெளி சவுக்கடியில் அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு ஆதினத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை(26) முன்னிட்டு பெரும் சிவனிரவு விரத திருவிழா நடைபெற உள்ளது. சிவராத்திரி தினமான 26 -02-2025 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 108 சிவ லிங்கங்களுக்கு நல்லெண்ணெய் திருமஞ்சனம் நடைபெறுவதோடு, சிவனிரவு முதலாம் கால பூசை மாலை 6 மணிக்கும் இரண்டாம் கால பூசை இரவு 11 மணிக்கும், மூன்றாம் காலப்பூசை அதிகாலை 3 மணிக்கும், நாலாம் கால பூசை காலை 05 மணிக்கும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு இணைந்ததாக ஆதீன வளாகத்தில் ஆதின தர்ம சாலை, சோதிமலர் அம்மா ஆங்கில மொழி முன்பள்ளி கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. பூசைகள் யாவும் செந்தமிழ் ஆகமத்தில் தனி ஒளிசிவம் ஜி. தயாளன் ஐயா அவர்களால் நடத்தப்படுவதோடு, சிவனடியார்கள் சிவலிங்கங்களுக்கு பூசையாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே சிவனடியார்கள் அனைவரையும் பெரும் சிவிரவு விரதபெருவிழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர் மட்டக்களப்பு ஆதீனம் ஏற்பட்டாளர்கள்.





