மட்டக்களப்பு கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற மாபெரும் கௌரவிப்பு விழா – 2025

-பிரபா –

மட்டக்களப்பு கித்துள் மட்/ மமே/ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீச்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும், மாணவர்களை சிறந்த முறையில் கற்பித்த ஆசிரியர்களுக்கும், அதிபரையும், பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா (19) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் செல்வி நாகமணி ஜெயராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கௌரவிப்பு நிகழ்வானது, கர்நாடக சங்கீத ஆசிரியை அமரர் சிவசக்தி சிவனேசன் அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு கரோ மன்றம் லண்டன்(UK) இதற்கான அனுசரனை வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும்,
சிறப்பு அதிதிகளாக திருமதி சங்கரி கங்கேஸ்வரன், (பிரதிகல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு மேற்கு) திருமதி சரோஜினி மகேஸ்வரநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம். )மற்றும் பலர் கௌரவ அதிதிகளாவும், அழைப்பு அதிதிகளாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

கௌரவிப்பு விழாவின் விழா ஒருங்கிணைப்பாளராக மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி வழிபாட்டு கரோ மன்றம். லண்டன் அமைப்பின் இணைப்பாளர் திரு கே. துரைராஜா செயற்பட்டார்.
நிகழ்விலே மாணவர்களது கலை கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.