பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு.
-பிரபா –
அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் இந்த வருடம் புதிய மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டது.அதனை அடுத்து கிராம மக்களால் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றையும்,பேரணியையும் முன்னெடுத்திருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் ஆகியோரும் வருகை தந்திருந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலே பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், மற்றும் கோடீஸ்வரன், ஆகியோர் கடந்த கால அரசாங்கத்தினால் வடகிழக்கு பகுதிகளிலே இலஞ்சமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகின்ற மதுபான சாலை உத்தரவு பத்திரங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு இடித்துரைத்தனர்.
நாம் ஆட்சிக்கு வந்தால் புதிதாக வழங்கப்பட்ட மதுபானசாலை பத்திரங்களை ரத்து செய்வோம் என்று மக்களுக்கு கூறிய வாக்குறுதிகளை ஜனாதிபதி அவர்கள் உடன் நிறைவேற்ற வேண்டும். என்றும் குறிப்பாக பெரியநீலாவணை கிராமத்திலே அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையால் குடும்மங்களிடையே,பிரச்சினைகள் இதனால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர், எனவே மதுபானசாலைகளை அமைப்பதென்றால் அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் மக்கள் உள்ள. கிராமங்களை தவிர்த்து சுற்றுலா பகுதிகளை தெரிவு செய்து அமையுங்கள் என்றும் பெரியநீலாவணை கிராமத்திலே தற்போது திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை இந்த அரசாங்கம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இணைந்து குரல் கொடுத்தனர்.
பெரியநீலாவணையில் மதுபான சாலையை அகற்றக்கோரிய மக்கள் எதிர்ப்பு போராட்டம் 13 வது நாளாக நேற்றய தினமும் தொடர்ந்தது.