பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு.
-பிரபா –
பெரியநீலாவணையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் வழங்கிய மதுபான சாலை அனுமதி பத்திரத்திற்கு அமைய புதிய மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரிய நீலாவணையில் ஒரு மதுபான சாலை உள்ள நிலையில் புதிய மதுபானசாலை ஒன்று அவசியம் இல்லை என்பதை மக்கள் வலியுறுத்தி மதுபான சாலைகள் எல்லாவற்றையும் அகற்ற கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றும் பனிரெண்டாவது (12) நாளாக மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இப் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்குமா? அப்படி தீர்வு ஏதும் எட்டாத பட்சத்தில் தீக்குளிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கல்முனை நேற்றுக்கு தெரிவித்தார்.
தொடபுடைய செய்தி





