“கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக ” கல்முனை மாநகர பிரதேசங்களில் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் நாளை (16) முன்னெடுப்பு.!
பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணி நாளை ஞாயிற்றுக்கிழமை (2025.02.16) முன்னெடுக்கப்படவுள்ளது.
காலை 7.30 மணி தொடக்கம் முற்பகல் 11.30 மணி வரை 09 கடற்கரை பிரதேசங்களில் இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்தில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் பங்குபற்றவுள்ளனர்.
அத்துடன் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். பொது மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.