பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு.

-பிரபா-

பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.


பெரியநீலாவணை பொது அமைப்புகளும், பொதுமக்களும், இணைந்து கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மதுபான சாலையை அகற்றுமாறு கூறிய மகஜுரும் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமா தனது அதிகாரத்துக்குட்பட்டு மூட நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந் நிலையில் மதுபான சாலை நேற்று முன்தினம்(11) மீண்டும் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் பௌர்ணமி தினம் என்பதால் மதுபான சாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. இன்று மீண்டும் மதுபான சாலை திறந்தபோது தொடர்ந்து மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் பொலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன் பெரியநீலாவணை பொலீஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்ட காரர்கள் ஒரு சிலர் மீது கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் தடை உத்தரவினையும் பெற்று அங்கு வாசித்துக் காட்டியதோடு, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறு கூறினர். பொது மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.