நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது –

மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்புவதற்கு பல மணிநேரம் ஆகும் என்று  உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.