பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்!

-பிரபா –
கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இயங்கி வரும், பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் நேற்றைய தினம்(8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


பெரியநீலாவணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் எஸ். கிருஷ்ணராஜ் தலைமையிலே பொது நூலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது வாசகர் வட்டத்துக்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

வாசகர் வட்டத்தின் தலைவராக நூலகத்தின் பொறுப்பாளராக தற்போது இருக்கின்ற T. ரவிச்சந்திரன் அவர்களும், செயலாளராக திரு N. சௌவியதாசன் அவர்களும், பொருளாளராக V. கிசோகாந்த் மற்றும், உப தலைவராக S. கிருஷ்ணராஜா உபசெயலாளராக, C. குமுதன் அவர்களும், தெரிவு செய்யப்பட்டதோடு மேலும் 10 உறுப்பினர்கள் இதற்கான நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இன் நூலகத்துக்கான நூல்களை அன்பளிப்பு செய்ய விரும்பும் ஆர்வலர்கள் வாசகர் வட்ட நிர்வாக உறுப்பினர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி நூல்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றனர், பெரியநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத்தினர்