நேற்று அம்பாறையில் கிழக்கு ஆளுநரின் நேரடி நடமாடும் சேவை !!

( வி.ரி.சகாதேவராஜா)

 கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவினால்

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.

 பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று  வியாழக்கிழமை(6) இச் சேவை நடைபெற்றது.

 இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஏலவே முறையிட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட்டது.

பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதே வேளை ஆளுநர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.