பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.
– பிரபா –
கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் பெரியநீலாவணை பொது நூல் நிலையத்துக்கான ஒரு தொகுதி நூல்களை அம்பாறை மாவட்ட குடிசார் பொது அமைப்புகளின் தலைவரும், பெரிய நீலாவணை நெக்ஸ்ட் டேப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகரும், சமாதான நீதவானும் ஆகிய திரு கண. வரதராஜன்(ஒய்வு பெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர்) இன்றைய தினம் வழங்கி வைத்தார்.
இன்றைய தினம் நூல்கள் வழங்கி
வைக்கும் நிகழ்விலே பெரிய நீலாவணை 1B,கிராம உத்தியோகத்தர் திரு V.கார்த்திக், பெரிய நீலாவணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர், திரு எஸ்.கிருஷ்ணராஜா, கல்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு C. குமுதன், பெரியநீலாவணை நெக்ஸ்ட் டேப் சமூக அமைப்பின் தலைவர் திரு N.சௌவியதாசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பெரியநீலாவணை பொது நூலகத்துக்காக புத்தகங்களை அன்பளிப்பு செய்ய விரும்பும் சமூக ஆர்வலர்கள் முடியுமான அளவு புத்தகங்களை வழங்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றனர் பெரியநீலாவணை பொது நூலக அபிவிருத்தி குழுவினர்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2025/02/1000296889-1-461x1024.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2025/02/1000296888-1-1024x461.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2025/02/1000296887-1-1024x461.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2025/02/1000296886-1-1024x461.jpg)
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2025/02/1000296885-1-1024x461.jpg)