”மாவை” எனும் தமிழரசின் அடையாளம் நேற்று தீயில் சங்கமம் – பெருந்திரளானோர் கண்ணீர் சிந்ந விடை பெற்றார்!


தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்கள், அரசியல் பிரமுகர்கள் கண்ணீர் சிந்த இடம் பெற்றது. மாவை எனும் தமிழரசுக்கட்சியின் அடையாளம் தீயுடன் சங்கமானது.


யாழ். மாவிட்டபுரத்தில் உள்ளஅன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுகாலை 8 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முற்பகல் 10 மணிக்குஇலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி.தலைமையில் அஞ்சலி உரைகள்ஆரம்பமாகின.

அஞ்சலி உரைகள் நிறைவுற்றபின்னர் பிற்பகல் ஒரு மணியளவில்
அன்னாரின் புகழுடல் வீட்டில் இருந்துஊர்வலமாக மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பெருந்திரளானோரின்கண்ணீருக்கு மத்தியில் மாவை சேனாதிராஜாவின் புகழுடன் தீயுடன் சங்கமமானது.
இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள்,பொது அமைப்பினர், மத குருமார்கள்,சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள்மற்றும் பொதுமக்கள் எனப் பலரும்கலந்துகொண்டு மாவை சேனாதிராஜாவுக்குத் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
1942ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்27ஆம் திகதி பிறந்த மாவை. சோ.
சேனாதிராஜா வீட்டில் தவறி வீழ்ந்தநிலையில் – யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில்- சிகிச்சைகள் பலனின்றி கடந்த 29ஆம்திகதி காலமானார்.