இன்று அம்பாறை மாவட்ட தமிழரசு முக்கியஸ்தர்கள் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி ; குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்!!
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை தமிழரசி கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் இன்று (1) சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்று முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் கல்முனை தமிழசுக்கட்சி கிளை தலைவருமான மு.இராஜேஸ்வரன் , காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட பலர் இன்றைய தினமும் அமரர் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திருமதி சேனாதிராஜா மகன் கலையமுதன் உள்ளிட்ட குடும்ப உறவுகளை சந்தித்து அனுதாபங்களைத் தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனையும் சந்தித்து அளவளாவினர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து தினமும் கட்சி முக்கியஸ்த்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் என பெருமளவானவர்கள் அன்னாரின் இல்லத்திற்கு சென்று அமரர் மாவை சேனாதிராசாவின் புகவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளைய தினம் இறுதிக்கிரியை இடம் பெற்று உடல் தகனம் செய்யப்படும்.