கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் தைப்பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று (31) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக மாட்டு வண்டிலில் பொங்கலுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் பற்றிமா பெண்கள் பிரிவிலிருந்து ஊர்வலமாக விளக்கங்களுடன் வாழை தோரணங்களோடு ஆண்கள் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் இடம் பெற்றது.
அதிபர் அருட்சகோ. அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அங்கு பொங்கல் பானைக்கு பால் ஊற்றினார்கள்
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
அங்கு சிவ.ஜெகராஜன் கருத்துரைக்கையில்.
தமிழரின் பண்பாடு பாரம்பரியம் அடையாளம் போன்றவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் சார்ந்த பாடசாலைகளுக்கும் உள்ளது .
இன்று தமிழர்களின் உடை என்ன அவர்களின் பாரம்பரியம் என்ன என்பது தெரியாமல் பலர் இருக்கின்றார்கள். அதேபோன்று தைப்பொங்கலின் முக்கியத்துவம் என்ன அதன் பாரம்பரியம் என்ன என்பது தொடர்பாக எதிர்கால சந்ததிக்கு அதனை முறைப்படி எத்தி வைக்க வேண்டும். அதில் கணிசமான பங்கு பாடசாலைகளுக்கும் உண்டு. அதனை பற்றிமா தேசிய கல்லூரி சிறப்பாக செய்கிறது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.என்றார்.