அம்பாறை மாவட்டத்தோடு பின்னிப்பிணைந்து இருந்த தமிழ்த் தேசிய தூண் ஒன்றினை நாம் இழந்துள்ளோம்
கல்முனைத் தொகுதிக் கிளை தலைவர் அ.நிதான்சன் இரங்கல்
தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சேனாதிராஜா அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியிலும் கல்முனை வாழ் தமிழர்கள் மத்தியிலும் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.தந்தை செல்வாவின் காலம் தொட்டு தன் இளமைப் பருவம் தொடக்கம் தன்னுயிரை தமிழ்த் தேசியத்துக்காக அர்ப்பணித்த அமரர் மாவை சேனாதிராஜா அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி பணியிலும் உரிமைசார் செயல்பாட்டிலும் முன் நின்று உழைத்தவர் தமிழ் அரசுக் கட்சியின் வரலாற்றில் எம் மாவட்டத்தின் நிலபுல மக்களின் நிலை என அனைத்தும் அறிந்த தலைவர் மேலும் 1994ம் ஆண்டு எமது மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட அன்னார் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.இருப்பினும் அம்பாறை மாவட்ட மக்களின் குரலாக தொடர்ந்தும் பணியாற்றி இருந்தார்.அன்னாரின் இழப்பு தமிழ்த் தேசியப் பரப்பில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
நன்றி