காரைதீவு R.K.M ஆண்கள் பாடசாலையில் 10மாணவர்கள் சித்தி .
காரைதீவு இராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பாடசாலையில் 2024 நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அப்பாட சாலையில் இருந்து 35 மாணவர்கள் தேற்றி இருந்தனர்.
அதில் பத்து மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்ததாக பாடசாலையின் அதிபர் துரையப்பா யோகராஜா தெரிவித்தார்
. இந்த வகுப்பை ஆசிரியர்களான சுவேந்திரன் மற்றும் ஜெகதீபன் ஆகியோரின் சிறந்த வழிநடத்தலின் கீழ் இந்த மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாடசாலையின் பிரதி அதிபராக திருமதி நாகரஞ்சனி அவர்கள் கடமையாற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
1.புரவிஸ் – 165
2.நிதிஸ் – 164
3.லோஜித் – 160
4.சிறோஸ் – 152
5.தருக்சயன் – 148
6.துவாகர் – 148
7.பத்மவர்ஷான் – 147
8.ஹரிகேஸ் – 146
9.சிவதனுஸ் – 145
10.ஜசாம்ருதன் – 142