வி.சுகிர்தகுமார்

 கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் நேற்று 19ஆம் திகதி பலத்த மழைக்கு மத்தியிலும்  சிறப்பாக நடைபெற்றது.


 மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின்  கும்பாபிசேகத்திற்கான கிரியாகால ஆரம்பம் கடந்த (15) ஆரம்பமானது ,தொடர்ந்து (18) அதிகாலை காலை 5மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வோடும் 19ஆம் திகதி காலை 9மணி 58நிமிடம் முதல் 11 மணி 37 நிமிடம் வரையுள்ள அமிர்த சுயோக மீன லக்கின சுபமுகூர்த்தத்தில் மகா கும்பாபிசேக குடமுழுக்கும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.


 நடைபெற்ற ஏககுண்டயாக பூஜையினை தொடர்ந்து கலசத்திற்கான கும்பம் சொரியும் பக்தி பூர்வமான நிகழ்வு பெருந்திரளான பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் நடைபெற்றது.


 பின்னர் பிரதான கும்ப வெளி வீதி உலா நடைபெற்று அம்மனுக்கான கும்பம் சொரியப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றது.


 கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் நடைபெறு உள்ளதுடன்;; மார்ச் மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸ்டோத்தர சகஸ்ர 1008 சங்காபிசேத்துடன் மண்டல பூஜைகளும் கும்பாபிசேக கிரியைகளும் நிறைவுறும்.
 ஆலய தலைவர் சி.சுவேந்திரராஜா தலைமையில் நடைபெறும் கும்பாபிசேகத்தின் கிரியைகள் யாவற்றையும் சிவாகம கிரியாஜோதி சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் ஆசியுடனும் வழிநடத்தலுடனும் சிவஸ்ரீ கௌரி சங்கர் சர்மா குருக்கள் மற்றும் சாதகாசிரியராக சிவஸ்ரீ பத்மநிலோஜனசிவம் உள்ளிட்ட குருமார்கள்; நடாத்தி வைத்தனர்.