கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 850 பேருக்கு லயன்ஸ் கழகத்தால் 43 லட்ச ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதிகள் !

( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லயன்ஸ் கழகம் 43 லட்ச ரூபாய் பெறுமதியான 850 உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து இந்த பயனாளிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு வேறு நாட்களில் இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொன்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகள் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்திற்கான 

 நிகழ்வு காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது .

பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் 306 சி2 மாவட்ட ஆளுநர் லயன் ரஞ்சித் பெர்ணாண்டோ கலந்து சிறப்பித்தார் .

சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம  கலந்து சிறப்பித்தார்.

மேலும் காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, அம்பாரை, சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள் உட்பட்ட லயன்ஸ் கழகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

லயன்ஸ் கழகங்களின் சர்வதேச மன்றம்(LCIF) இதற்காக 15,000 யுஎஸ் டாலர்களை 11 மற்றும் 12 பிராந்தியங்களுக்கு வழங்கி இருந்தது என லயன்ஸ் பிரதிநிதி லயன் எம்.சுதர்சன் தெரிவித்தார்.