மன்னார் நீதிமன்ற வளாகத்தின் முன்னால்
துப்பாக்கிச் சூடு இருவர் பலி

16 Jan 2025 மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் (வயது 61) மற்றும் செல்வக்குமார் யூட் (வயது 42) என தெரியவந்துள்ளது.

படுகாயம் அடைந்த ஆணொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.