சிலோன் மீடியா போரத்தின் ஆளுமைகளுடனான சந்திப்புடன் கௌரவிப்பு நிகழ்வு
பாறுக் ஷிஹான்
சிலோன் மீடியா போரத்தின் SLAS ஆளுமைகளுடனான சந்திப்பும் கௌரவிப்பும் திங்கட்கிழமை (13) அட்டப்பளம் அட்டப்பளம் தனியார் விடுதியில் போரத்தின் தலைவர் ரியாத் .ஏ .மஜீத் தலைமையில் அமைப்பின் ஐந்தாவது வருட நிறவை ஒட்டி இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சிரேஸ்ட சேவை நிர்வாக அதிகாரிகள் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிரதம அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் , விசேட அதிதியாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வே. ஜெகதீசன் , என்.எஸ்.கன்ஸ்ரக்ஷன் எங்ஜினெரிங் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளர் நியாஸூம் கலந்து கொண்டனர்.