கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் தலைமையில் நேற்று (09.01.2025) இடம்பெற்றது. இதில் பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தெரிவு மற்றும் இடமாற்றம் , ஓய்வு பெற்றவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம் பெற்றன.

பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தெரிவு

தலைவராக பதவி வழியில் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் அவர்களும் செயலாளராக P.கிருபானந்தன் அவர்களும் பொருளாளராக K.திருநாகரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டதுடன் நிருவாக உறுப்பினர்களாக மேலும் 11 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இன்றைய நிகழ்வுகள் தம்பட்டை சுவாட் விடுமுறை வழாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 2024 ம் ஆண்டில் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றிருந்து.

அத்துடன் நலன்புரிச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீடசை, க.பொ.த.(சா/த) பரீட்சையில் 9A சித்தி, க.பொ.த.(உ/த) பரீட்சையில் பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களும் கௌரவப் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.