கிழக்கு மாகாணத்தில் ஓவியத் துறையில் சிறிகாந் முதலிடம்
( கலைஞர்.ஏ.ஓ.அனல்)
கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் அண்மையில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்க போட்டியில் ஓவியப் போட்டியில் புத்திசிகாமணி சிறிகாந் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, மாவட்டம், பட்டிருப்பு கல்வி வலயத்துத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் சித்திரப் பாடத்துறை சிரேஸ்ட ஆசிரியர் பு.சிறிகாந் ஓவியத்துறையில் மிகத்தேர்ச்சி பெற்ற ஆளுமைமிக்க ஒருவர். இவர் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் முதலிடம் பெற்று விருதுகளைப் பெற்றவர்.
இவருக்கான பாராட்டு மற்றும் கெளரவிப்பு ஞாயிற்றுக்கிழமை (22/12/2024) களுதாவளையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விருது விழாவின் போது விருது, சான்றிதழ் மற்றும் காசோலையைப் பெற்றுக்கொண்டார்