ஆலையடிவேம்பில் மீட்சி அமைப்பின் வெள்ளநிவாரண உதவிகள்-2024 .
(பிரபா)
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாது அன்றாட ஜீவனோ பாயத்துக்கு அல்லற்பட்டுக் கொண்டிருந்த கோளாவில் பகுதிவாழ் 90 குடும்பங்களுக்கு கடந்த 18.12.2024 புதனன்று மீட்சி அமைப்பின் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் ரூபா 2500/- பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களைக் கொண்ட இப்பொதிகள் அனைத்தும் மீட்சி அமைப்பின் பணிப்பாளர் எட்வின் விஜயரத்தினம் அவர்களுடாக அவ்வமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான. கண.வரதராஜன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
சட்டத்தரணி ஜெகசுதன் அவர்கள் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி வீதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோளாவில் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.