இலங்கையில்(Sri Lanka) எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்காமல் ஏதேனும் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த வங்கிகளில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சில கணக்கு வைத்திருப்பவர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை வழங்கி வங்கி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.