சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கப்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இலக்கிய விழா-2024 – விருது வழங்கும் நிகழ்வு  திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் விருது வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான
கிழக்கு மாகாண இளங்கலைஞர் விருது ஆற்றுகைக் கலைக்காக சைவப்புலவர் ,பண்டிதர் யோ.கஜேந்திரா அவர்களுக்கு வழங்கி வைக்கப்பெற்றது.
இவர் பல்துறைசாரந்த கலைஞர் பேச்சு,கதாப்பிரசங்கம்,ஆய்வு,இலக்கியம்,திறனாய்வு போன்ற துறைகளில் சிறந்து விளங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.