பெரிய நீலாவணையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.
(பிரபா)
பெரியநீலாவணையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் அமரர் கணேஷ் தினேஷ் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் நடத்தப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு, இன்று(08) நடைபெற்றது.
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணன் அவர்களின் வழிநடத்தலில் கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்கு பொறுப்பான வைத்தியர் பி. எம். கவிதா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் பெரியநீலாவணை கமு/ சரஸ்வதி வித்யாலயத்தில் இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
காவேரி விளையாட்டு கழகத்தின் தலைவர் தாதிய உத்தியோகத்தர் எஸ். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு,கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டதோடு, பல்வேறுபட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் இளைஞர்கள், இரத்த நன்கொடையாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர். பெரியநீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தினர் அமரர் கணேஷ் தினேஷ் அவர்களின் நினைவாக தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக இவ்வாறான இரத்ததான நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.