கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கே கல்முனை மாநகருக்கு பேரிடரை ஏற்படுத்தி உள்ளது
கல்முனைத் தொகுதிக் தமிழ் அரசுக் கட்சி தலைவர் அ.நிதான்சன் குற்றச்சாட்டு…
அவர் தெரிவித்ததாவது…
கல்முனை மாநகரசபையின் அலட்சிய போக்கால் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண வெள்ளப்
பெருக்கு காலத்தில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை கவலையளிக்கின்றது
கல்முனை மாநகரத்தில்
அதிக வர்த்தக நிலையயங்கள் ஆலயங்கள் என அனைத்தும் இன்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இன்றைய தினம் கல்முனை இளைஞர்கள் கல்முனை வடிகான்களை சுத்தம் செய்ய முயற்சி செய்த போது கொங்கீறிட் கொட்டப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில் சில வடிகான்கள் உள்ளதையும் குப்பைகளால் நிரம்பி வடிகான்கள் அடைக்கப்பட்ட நிலையையும் அம்மன் கோவில் வீதியில் அவதானித்துள்ளனர்.
வெள்ளம் வரும் முன் அணைகட்டு என்பது போல இருந்து முன் ஆயத்ததுடன் செயல்பட வேண்டிய கல்முனை மாநகரசபை உரிய காலத்தில் வடிகான்களை சுத்தம் செய்யாமல் தவறியமையால் இன்று அம்மன் கோவில் வீதி மற்றும் கல்முனை பிரதான வீதி மற்றும் கல்முனை பிராந்தியத்தில் அமைந்துள்ள உள்ளக வீதிகளின் வடிகான்களினால் நீர் வடிந்தோட முடியாத நிலையில் உள்ளது இதனால் மக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்வதோடு வெள்ளம் அதிகரித்து மக்களின் மனைகளுக்குள் புகும் நிலை அதிகரித்து உள்ளது ஆகவே உடனடியாகத் கல்முனை மாநகரசபை ஆணையாளர் இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்தகாலத்திலும் பார்க்க மழை வீழ்ச்சி பதிவாகி உள்ள இந்த தருணத்தில் முன் ஆயத்தமான வேலைகள் எதுவும் மாநகர சபையால் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும்
இந்த அசந்தமந்த போக்கு தொடர்பில் ஆளுநரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.