செல்லையா-பேரின்பராசா
நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச் சபையின் வடக்கு கிழக்கு மாகாண திருமாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு எஸ்.டி.தயாசிலன் கல்முனை தமிழ் பிரிவுக்கான முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி கே.தயாசீலன் கல்முனை மெதடிஸ்த சேகர முகாமைக் குரு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை அருட்பணி எஸ்.ரமேஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் வ.பிரபாகரன் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் பொ. ஜெகநாதன் ஆசிரிய ஆலோசகர் முகம்மட் சியாம் ஓய்வு நிலை அதிபர்களான திருமதி அ பேரின்பராசா ச.தேவச்சந்திரா ஈ.அருள்நேசன் செல்லையா-பேரின்பராசா வே.தங்கவேல் உட்பட பலர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்
இந்த வைபவத்தில் கிறிஸ்தவ வேத வாக்கியம் மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது
இவ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இப் பாடசாலையில் இயங்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.