இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்க
கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
இந்தத் தகவலை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா – ஈரப்பெரியகுளத்தில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
இதன்போது இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக்
கிடைத்த ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக
நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.
விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே
வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த வைத் தியர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்கு வதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக் கப்பட்டது
என்று சுமந்திரன் மேலும் கூறினார்.