வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜனார்தன் சங்கு சின்ன வேட்பாளர்புஸ்பராசா அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
ஆரம்பத்தில் இருந்தே சங்கு சின்னதில் போட்டியிடும் புஸ்பராஜா கரைதீவில் என்னை பற்றிய அவதூறான விடையங்களை பரப்பும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதனால் நான் அவர் மீது தேர்தல் ஆணையம் ஊடாக எச்சரிக்கை தொடுத்து ஊடகசந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தேன். இதனை அடுத்து பால் பண்ணையளர் சங்கத்தினர் என்னோடு கோபத்தில் இருந்ததாகவும் என்மீது வழக்கு தொடர இருப்பதாகவும் அவர்களது ஆதரவாளர்கள் மூலமாக அறிந்ததை அடுத்து எனது வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் வழியில் அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது அது ஒரு போலியான செய்தி என்றும் வீண் பிரச்சினைகள் எதுவும் வளர்க்க தேவை இல்லை என்றும் அண்ணன் (புஸ்பராஜா) உள்ளே இருக்கிறார் வாருங்கள் அவருடன் வந்து பேசுங்கள் என்று உள்ளே அழைத்து சென்றார்கள்.
மேலும் அவர்(புஸ்பராஜா) தெரிவித்தாவது அப்படி ஒரு பிரச்சினைகள் ஒன்றும் இல்லை வீண் பிணக்குகள் ஏற்படுத்திகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பினார். அவர்கள் கூறியதை போன்று
“சங்கு சின்னம் ஒட்டு மொத்தமாக 80% இற்கும் அதிகமான வாக்குகளை பெரும் என தான் எதிர் பார்ப்பதாகவும்”
“தான் சென்ற பிரச்சார பிரதேசம் எங்கும் அண்ணன் புஸ்பராசா இற்கே அதிகளவு ஆதரவு இருப்பதாகவும்”
“தன்னை தமிழ் அரசுகட்சியின் ஏனைய வேட்பாளர்கள் தன்னை வெறுப்பதாகவும் அதனால் தனது ஆதரவை அண்ணன் புஸ்பராசா இற்கு வழங்குவதாகவும்”
என்ற குற்றசாட்டுகள் முற்றிலும் பொய்யானது. என்று பகிரங்கமாக மறுப்பு தெரிவிக்கிறேன்.